3,080 மின்சிகரெட் கருவிகளை இறக்குமதி செய்த ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
2dcfdaa8-2c50-45e3-9ba0-cdd0b71632fe
குற்றஞ்சாட்டப்பட்ட நியோ இயாவ் சியாங், ‘ஹீட்ஸ்டிக்ஸ்’, மின்சிகரெட் கருவிகள், இரண்டு மின்சிகரெட்டுகள் ஆகியவற்றை இறக்குமதி செய்தபோது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்ததாக நம்பப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெவ்வேறு சுவைகளில் 3,080 மின்சிகரெட் கருவிகளை இறக்குமதி செய்தது உள்ளிட்ட மூன்று மின்சிகரெட் தொடர்பான குற்றச்சாட்டுகள் 44 வயது ஆடவர்மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான நியோ இயாவ் சியாங், 5,600 ‘ஹீட்ஸ்டிக்ஸ்’ எனும் சூடேற்றப்பட்ட புகையிலைகளையும் இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது.

‘ஹீட்ஸ்டிக்ஸ்’, மின்சிகரெட் கருவிகள், இரண்டு மின்சிகரெட்டுகள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததாக நம்பப்படும் நியோ, மார்ச் 7ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாலை 4 மணியளவில் இருந்தார்.

அன்று பிற்பகல் வாக்கில் செங்காங்கில் உள்ள தமது கழக வீட்டில் நியோவிடம் பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் நிலையில் 10 மின்சிகரெட்டுகள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நியோவின் வழக்கு செப்டம்பர் 18ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

2024 ஜனவரியிலிருந்து இவ்வாண்டு மார்ச் வரை சுகாதார அறிவியல் ஆணையம் $41 மில்லியன் மதிப்பிலான மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தது.

அது 2019ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்ட மின்சிகரெட்டுகளின் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு அதிகம்.

ஜூலை 29ஆம் தேதி, துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்த கனரக வாகனத்தில் 2,400 மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜூன் 27ஆம் தேதி, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழியாக மின்சிகரெட் பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு மலேசியக் கார்களை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

ஜூலை 24ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகள் வழி சிங்கப்பூருக்குள் நுழைந்த கார் ஒன்றில் 5,900க்கும் அதிகமான மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மின்சிகரெட்டுகளை வைத்திருந்தாலோ வாங்கினாலோ பயன்படுத்தினாலோ தற்போதைய சட்டத்தின்படி அதிகபட்சமாக $2,000 அபராதம் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்