தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காது கேளாதோருக்குக் கைப்பேசியில் பேச உதவும் உள்ளூர் செயலி

2 mins read
e3a0754a-0cb2-4b51-bd85-5c79f0b7ebc6
கால்பிரிட்ஜ் செயலி, அதை உருவாக்கிய குழு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காது கேளாதோர், தங்களது கைப்பேசி எண்ணுக்கு வரும் அழைப்பை ஏற்கவும் பிறரைக் கைப்பேசியில் அழைக்கவும் உதவ புதிய செயலி ஒன்று சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

கால்பிரிட்ஜ் (CallBridge) எனும் இந்தச் செயலி மூலம் இது சாத்தியமாகிறது.

இதேபோனறு நாகி‌ஷ், இனோகேப்‌ஷன் போன்ற செயலிகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவற்றைச் சிங்கப்பூரில் பயன்படுத்த முடியாது.

கால்பிரிட்ஜ், டெக்ட்ஸ்-டு-ஸ்பீச் எனப்படும் உரையாடலை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துகிறது. கால்பிரிட்ஜ், கைப்பேசியில் அழைப்பவர் பேசுவதை வார்த்தைகளாக மாற்றித் தரும்.

இது, முதலில் முன்னுரிமை தகவல் தெரிவிப்பு (push notification) முறையின் மூலம் பயனர்களுக்குத் தெரியப்படுத்தப்படும். பிறகு காது கேளாதோர் வார்த்தைகளைத் தட்டச்சு செய்து பதிலளிப்பர். அந்த வார்த்தைகள் உரையாடலாக மாற்றப்பட்டு கைப்பேசியில் பேசுபவருக்குத் தெரியப்படுத்தப்படும்.

கால்பிரிட்ஜ் செயலியைப் பயன்படுத்துவோர் கைப்பேசியில் அழைக்கும்போது அவர் காது கேளாத ஒருவருடன் தொடர்புகொள்ளவிருப்பது தெரியப்படுத்தப்படும். அதனால் பதில் பெற கூடுதல் காலம் ஆகலாம் என்றும் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக நடந்த ‘ஸ்பார்க்ஸ் எக்ஸ் பில்ட் ஃபார் குட் கம்யூனிட்டி ஹேக்கத்தான்’ (Sparks x Build for Good Community Hackathon) எனும் தொழில்நுட்பத் திட்டத்தில் கால்பிரிட்ஜ் செயலி உருவாக்கப்பட்டது. சமூகத்தில் உள்ள சவால்களைக் கையாள தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதற்கு இளையர்களை ஊக்குவிக்க அந்த ஹேக்கத்தான் திட்டத்துக்கு மக்கள் கழகமும் ஓப்பன் கவர்மென்ட் புரோடக்ட்ஸ் (ஓஜிபி) அமைப்பும் ஏற்பாடு செய்தன.

கால்பிரிட்ஜ் செயலியை உருவாக்கிய குழு எட்டு வாரங்கள் நீடிக்கும் எக்செலரேட்டர் திறன்பயிற்சித் திட்டத்துக்குத் தகுதிபெற்ற ஐந்து குழுக்களில் ஒன்று. அதன் மூலம் தங்கள் திட்டங்களை மேம்படுத்திச் செயல்படுத்த குழுக்களுக்கு 20,000 வெள்ளித் தொகையும் வழிகாட்டிகள் மூலம் ஆதரவும் வழங்கப்பட்டன.

கால்பிரிட்ஜ், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கிட்டத்தட்ட 10 காது கேளாதோரைக் கொண்டு சோதனையிடப்பட்டு வந்தது. பயனர்களின் கருத்துகளைக் கொண்டு இச்செயலி மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்