தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் சேவைக்கு ஜப்பானிய மாதர்; ஆடவருக்கு சிறை

1 mins read
9bc77ec1-8774-461d-8576-c4127d6a9c9d
கோ பூன் ஹோங், 25, என்ற அந்த ஆடவர் ஜூன் 30ஆம் தேதி பாலியல் தொழிலுக்காக மாதர் இருவருக்கு தங்க இடம் கொடுத்து வைத்திருந்தது, அவர்கள் பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தில் உயிர் வாழ்ந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். - படம்: சிங்கப்பூர் காவல் துறை

ஜப்பானிய மாதரை பாலியல் தொழிலுக்கு ஆள்சேர்ப்பதற்காக இணையப் பக்கத்தை உருவாக்கி அதை செயல்படுத்தி வந்தார் ஆடவர் ஒருவர்.

அவருக்கு நீதிமன்றம் ஓராண்டுச் சிறை, $4,000 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கோ பூன் ஹோங், 25, என்ற அந்த ஆடவர் ஜூன் 30ஆம் தேதி பாலியல் தொழிலுக்காக மாதர் இருவருக்கு தங்க இடம் கொடுத்து வைத்திருந்தது, அவர்கள் பாலியல் தொழில் சம்பாதித்த பணத்தில் உயிர் வாழ்ந்தது என ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வோங் சி சான் என்ற நபர் அமைத்த இந்தக் குற்றக் கும்பலுக்கு மலேசியரான கோ பாலியல் தொழிலுக்கு ஆள்சேர்க்கும் பணியில் சேர்க்கப்பட்டார்.

அதில் கிடைக்கும் வருமானத்தில் முதலில் 10 விழுக்காட்டுத் தொகை கோவுக்கு தரப்பட்டது. பின்னர் அது 20 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் வோங் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது இந்தத் தொழிலை கோ மேற்கொண்டார். வோங் மீதான விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்