அரசாங்க ஊழியரிடம் பொய் கூறியவருக்கு சிறை

1 mins read
171a1a63-70fc-4b22-93a3-59b240342656
முஹம்மது ஜைரில் இஸ்மாயில். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத்தின் மேற்பார்வையில் இயங்கிய குழு ஒன்றின் மூத்த மேலாளர், அரசாங்க ஊழியரிடம் பொய் கூறிய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டு உள்ளார்.

முஹம்மது ஜைரில் இஸ்மாயில், 54, எனப்படும் அவருக்கு வியாழக்கிழமை (நவம்பர் 20) ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர், ‘எம்எம்டபிள்யூஎஸ்எஸ்’ (MMWSS) என்னும் குழுவின் மூத்த மேலாளராகக் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இருந்தார்.

கிரோம் என்னும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு அளித்த சேவைக்காக அவரிடம் கட்டணம் வாங்கியபோதிலும், அந்நிறுவனத்தின் நிதி தொடர்பில் தமக்கு ஆர்வம் இல்லை என்று முயிஸ் அதிகாரியிடம் ஜைரில் கூறினார்.

‘எம்எம்டபிள்யூஎஸ்எஸ்’ குழு சிங்கப்பூரின் பள்ளிவாசல்கள், மதரசாக்கள் போன்ற முஸ்லிம் அறங்காவல் அமைப்புகளுக்குத் தேவைப்படும் பொதுவான நிர்வாகச் சேவைகளில் ஈடுபட்டு வந்தது. கணக்கியல் மற்றும் நிதி நிர்வாகம் போன்றவை அந்தச் சேவைகளில் அடங்கும்.

அந்தக் குழுவில் பணியாற்றிய ஜைரில் கிரோம் நிறுவனத்தின் சேவைகள் தொடர்பாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட புகார்களை விசாரிக்க முயிஸ் கடந்த 2023 ஜூன் மாதம் குழு ஒன்றை நிறுவியது. அப்போது அவர் பொய் கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்