நியூட்டன் அருகே சனிக்கிழமை (அக்டோபர் 18) சட்டவிரோதமாக வாணவேடிக்கை நிகழ்த்தியதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
வாணவேடிக்கையை நேரில் கண்ட திரு சென், 52, அன்றிரவு 10.15 மணியளவில் அதை தாம் பார்த்ததாக ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
வாணவேடிக்கை, கம்போங் ஜாவா மேம்பாலச்சாலைக்கு அருகே கார்லில் சாலையில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது.
திரு அவுன் கோ என்பவர், வாணவெடிக் காட்சியைக் காட்டும் எட்டு வினாடிக் காணொளியை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அன்றிரவு பதிவிட்டார்.
இதுகுறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, இச்சம்பவம் பற்றிப் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறியது.

