சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகள் விற்பனை; வர்த்தகருக்கு 22 மாதச் சிறை

2 mins read
fc835f46-5e44-4b78-8f8e-76486060b5cb
2,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கருவிகளின் மதிப்பு ஏறத்தாழ $500,000. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களைச் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யும் கருவிகளை விற்ற நிறுவனத்தின் இயக்குநருக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) 22 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அக்கருவிகள் சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியில் விற்கப்பட்டன.

அம்கோனிக்ஸ் டெக்னாலஜியின் இயக்குநரான 68 வயது பெக்கி யு பெங் சுவே ஹு, தம்மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

அத்தகைய ஒளிபரப்புக் கருவிகளை விற்பனை செய்ததன் மூலம் அவர் காப்புரிமை மீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் 26 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

யுவின் நிறுவனத்துக்கு $384,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு சிம் லிம் ஸ்குவேரில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

அவற்றில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

2,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கருவிகளின் மதிப்பு ஏறத்தாழ $500,000.

இதுவரை இந்த அதிரடிச் சோதனைகளில் கைதான மூவருக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது.

யு விற்பனை செய்த கருவிகள் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டங்களை ஒளிபரப்பு செய்தன.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதியன்று நியூகாசலுக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் இடையிலான ஆட்டமும் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று ஸ்பர்ஸ் குழுவுக்கும் செல்சிக்கும் எதிரான ஆட்டமும் அவற்றில் அடங்கும்.

இந்தச் சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகளை அம்கோனிக்ஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து விற்பனை செய்து வந்தது.

கருவிகள் $169லிருந்து $275 வரை விற்பனை செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்