தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக மறுவிற்பனை வீட்டு விலை 0.9% அதிகரிப்பு

1 mins read
63d2c94a-c960-4800-b817-0d440f78ff8c
வீட்டு விலை மட்டுமன்றி, விற்பனை செய்யப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கையும் சரிந்தது. ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதம் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்த 6,981 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலை 0.9 விழுக்காடு ஏற்றம் கண்டது. காலாண்டு அடிப்படையில் இதுவே 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைவான ஏற்றம்.

இந்தத் தகவலை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) வெளியிட்டது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வீடமைப்பு வளரச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீடு 1.6 விழுக்காடாக இருந்தது.

இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரிப்பு 0.9 விழுக்காடாகப் பதிவானதை அடுத்து, தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக விலை அதிகரிப்பு மெதுவடைந்துள்ளது.

வீட்டு விலை மட்டுமன்றி, விற்பனை செய்யப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கையும் சரிந்தது. ஏப்ரல் மாதத்துக்கும் ஜூன் மாதம் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்த 6,981 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.

2024ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 7,352 வீடுகளைவிட இது ஐந்து விழுக்காடு குறைவு.

பொருளியல் நிலையற்றத்தன்மை காரணமாக வீவக மறுவிற்பனை வீடுகளின் விற்பனையும் விலையும் குறைந்துள்ளன.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025ஆம் ஆண்டில் மிதமடையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய வர்த்தகப் பதற்றநிலை, ஊழியர்களுக்கான தேவை குறைந்திருப்பது ஆகியவை பொருளியல் நிலையற்றத்தன்மைக்கு காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“பொருளியல் நிலையற்றத்தன்மை நிலவுவதால், வீடு வாங்கும்போதிலும் வீட்டுக் கடன் எடுக்கும்போதிலும் குடும்பங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்