தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாற்பது வாகனங்களுடன் சேவையைத் தொடங்கிய கிரேப்கேப் டாக்சி

2 mins read
0ece19dc-49f9-4ade-878b-7185537af19d
கிரேப்கேப் டாக்சி சேவை அதன் தலைமையகமான ஒன் நார்த்தில் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிவைக்கப்பட்டது. - படம்: லியன் ஹ சாவ் பாவ்

சிங்கப்பூரின் ஆறாவதும் ஆக அண்மையிலுமான கிரேப்கேப் டாக்சி ஜூலை மாதத்திலிருந்து தனது சேவையை தொடங்குகிறது.

அது தொடக்கத்தில் 40 டாக்சிகளுடன் தனது சேவையைத் தொடங்குகிறது. எனினும், அடுத்த மூன்றாண்டுகளில் மேலும் பல டாக்சிகளை அது தனது சேவையில் இணைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேப்கேப்பின் நால்வர் அமர்ந்து செல்லக்கூடிய டாக்சி பயணத்தின் தொடக்கக் கட்டணம் $4.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்த 10 கிலோ மீட்டருக்குள் வரும் ஒவ்வொரு 400மீட்டர் தூரத்துக்கும் கூடுதலாக 26 காசு கட்டணம் என்று நிர்ணியிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்து கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு 350 மீட்டருக்கும் 26 காசு என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், டாக்சியின் காத்திருப்பு நேரக் கட்டணம் ஒவ்வொரு 45 விநாடிகளுக்கும் 26 காசு என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண நிர்ணயம் கம்ஃபர்ட் டெல்கிரோ, டிரான்ஸ்கேப், ஸ்டிரைட்ஸ் பிரிமியர், பிரைம் டாக்சி சேவைக் கட்டணங்களை ஒத்திருப்பதாக ஒன் நார்த்தில் நடைபெற்ற அதன் அறிமுகப் பயணத்தில் தெரியவந்துள்ளது.

கிரேப்கேப் டாக்சி சேவை கிரேப்ரெண்டல்ஸ் எனப்படும் வாடகை வாகன சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். கிரேப்கேப் 40 ஐந்தாம் தலைமுறை பெட்ரோல்-மின்சாரம் என இரண்டிலும் இயக்கப்படக்கூடிய டொயோட்டா பிரையஸ் வாகனங்களுடன் தனது டாக்சி சேவையை தொடங்கும் என ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கிரேப்கேப் டாக்சி சேவை உரிமத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, அது தனது வாகன எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி டாக்சி சேவைக்கான குறைந்தபட்ச வாகனத் தேவை அடிப்படையில் 800 வாகனங்களைக் கொண்டிருக்க வேண்டும். எனினும், கிரேப்கேப் நடத்துனர்கள் அந்த இலக்கை மூன்றாண்டுகள் முடியும் முன்னரே எட்ட எண்ணம் கொண்டுள்ளனர் என்று கிரேப் பேச்சாளர் ஒருவர் விளக்கினார்.

இதன் தொடர்பில் கிரேப் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் சேவைக்கு மேலும் இரண்டு ஹியூண்டாய் கோனா ரக, பெட்ரோல்-மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய வாகனங்களை ஈடுபட வைக்கப்போவதாக கூறப்படுகிறது. இந்த ஹியூண்டாய் கோனா டாக்சிகளை இயக்க வியாழக்கிழமை முதல் (ஜூலை 3) பதிவுசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்