தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்கம் மீடியாகார்ப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு $380 மில்லியன் வழங்குகிறது

2 mins read
ed5a17b6-75eb-4b76-b6e5-8bb15f7f9f9b
2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கம், மீடியாகார்ப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 310 மில்லியன் வெள்ளி கொடுத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசாங்கம், மீடியாகார்ப் நிறுவனத்திற்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 380 மில்லியன் வெள்ளி வழங்கியுள்ளது.

தேசிய ஒளிபரப்பு நிறுவனமான மீடியாகார்ப், உள்ளூர் வாசிகளிடம் சிங்கப்பூர் தொடர்பான செய்திகளைக் கொண்டு சேர்க்க அந்த நிதி வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கம், மீடியாகார்ப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 310 மில்லியன் வெள்ளி கொடுத்தது.

சிங்கப்பூரர்களிடம் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்க அந்த நிதி வழங்கப்பட்டது.

இந்தத் தகவல்களைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர் போலவே மக்கள் தொகை கொண்டுள்ள பின்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் அவர்களின் தேசிய ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 750 மில்லியன் வெள்ளி கொடுப்பதாகத் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

“மீடியாகார்ப் நிறுவனம் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான உள்ளூர் மக்களைச் சேர்ந்தடைந்துள்ளது, மேலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான பார்வையாளர்கள் மீடியாகார்ப்பின் சேவைகள் மனநிறைவு தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்,” என்று அமைச்சர் டியோ கூறினார்.

தற்போது தொலைக்காட்சி மட்டுமில்லாது சமூக ஊடகங்கள் மூலமாகவும் மீடியாகார்ப் மக்களைச் சென்றடைவதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு காலத்திற்கு ஏற்ப மீடியாகார்ப் செயல்பட்டுவருவதாகவும் திருவாட்டி டியோ சொன்னார்.

கடந்த 10 ஆண்டுகளில் மீடியாகார்ப் தொலைக்காட்சிகள், மக்களிடம் சென்றடையும் விகிதம் 10 விழுக்காடு சரிந்துள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் மீவாட்ச் (meWatch) உள்ளிட்ட இணையத் தளங்களைக் கொண்டு அந்நிறுவனம் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்று அமைச்சர் டியோ சுட்டினார்.

உண்மையான செய்திகளை வழங்கும் சிங்கப்பூர் பொது ஊடகச் சேவைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு தரும் என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்