சிங்கப்பூரில் இவ்வாண்டு மே 3ஆம் தேதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சீட்டுகளும் பிற ஆவணங்களும் சனிக்கிழமை (நவம்பர் 22) எரியூட்டப்பட்டன.
வாக்காளர்கள் செலுத்திய வாக்குச்சீட்டுகளின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் இந்த நடைமுறை கையாளப்படுகிறது.
உச்சநீதிமன்றப் பெட்டகத்தில் வாக்குச்சீட்டுகளும் ஆவணங்களும் வைக்கப்பட்டிருந்த முத்திரையிடப்பட்ட பெட்டிகள் காலை துவாஸ் சவுத்தில் உள்ள எரியூட்டு ஆலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறு செய்யப்பட்டது.
சட்டத்தின்படி தேர்தலின் முடிவில் வாக்குச்சீட்டுகளையும் இதர ஆவணங்களையும் முத்திரையிடப்பட்ட பெட்டியில் வைத்து ஆறு மாதங்களுக்குப் பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
பின் அவை தேர்தல் வேட்பாளர்கள், வெவ்வேறு கட்சி உறுப்பினர்கள், தேர்தல் துறை அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் எரியூட்டப்படும்.
இவ்வாண்டு மே 3ஆம் தேதி 2.4 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் தீவெங்கும் உள்ள 1,240 வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளைச் செலுத்தினர்.
மக்கள் செயல் கட்சி 65.57 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது. நாடாளுமன்றத்தின் 97 இடங்களில் 87 இடங்கள் மக்கள் செயல் கட்சி வசமானது.
தொடர்புடைய செய்திகள்
10 இடங்கள் பாட்டாளிக் கட்சி வசமானது.

