தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிவர்சைட் ரோட்டில் வெள்ள அபாயம் : பியுபி

1 mins read
c7415b13-6d53-40ea-b37a-e822dfa73012
சாலைச் சந்திப்பைத் தவிர்க்கும்படி கழகம், பிற்பகல் கிட்டத்தட்ட 2 மணிக்கு எக்ஸ் தளத்தின்வழியாக பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரிவர்சைட் ரோட்டுக்கும் அட்மிரல்டி ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் திடீர் வெள்ளம் சனிக்கிழமை (ஜூன் 28) ஏற்படும் என்று தேசிய நீர் முகவையான பியுபி தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அந்த இடத்தைத் தவிர்க்கும்படி கழகம், பிற்பகல் கிட்டத்தட்ட 2 மணிக்கு எக்ஸ் தளத்தின்வழியாக பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்தது.

பிற்பகல் 1.45 மணி முதல் 2.25 மணி வரை சிங்கப்பூரின் வடக்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் சில நாள்களில், சிங்கப்பூரின் சில பகுதிகள் காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூறிய குறுகிய கால கனமழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம், ஜூன் 16ஆம் தேதியன்று தெரிவித்தது.

இந்தக் காலகட்டத்தில் வெயில் இருக்கும் தினங்களும் காற்று வீசும் தினங்களும் இருக்கும் என்றும் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு சராசரிக்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆய்வகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்