ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் புதன்கிழமை (நவம்பர் 12) புளோக் 839 ஈசூன் ஸ்திரீட் 81ல் நிகழ்ந்தது.
காலை 10 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இரண்டாவது மாடி வீட்டின் சமையலறையில் தீ மூண்டது.
அதைத் தீயணைப்பாளர்கள் அணைத்தனர்.
அந்த வீட்டைச் சேர்ந்தவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைக் கண்காணிக்காமல் விட்டதால் தீ மூண்டிருக்கக்கூடும் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

