ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் மதிப்பை ஆய்வாளர்கள் நியாயமின்றி உயர்த்தினர்: தற்காப்பு வழக்கறிஞர்

1 mins read
5bb72846-d01b-4375-bebe-b03dc7fb020f
வழக்கின் இரண்டாவது சாட்சியாக, ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு மற்றும் முதலீட்டாளர் உறவுகளின் முன்னாள் தலைவராகப் பணிபுரிந்த வின்னிஃப்ரிட் ஹீப் ஆஜரானார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடல்நீரைக் குடிநீராக்கும் துவாஸ்பிரிங் திட்டத்திற்கான மார்ச் 2011 திட்ட அறிவிப்பைக் கவனமாக ஆராய்வதன் மூலம், அதன் லாப இலக்குகளை அடைய ஹைஃப்ளக்ஸ் நிறுவனம், உற்பத்தி செய்யும் அதிகப்படியான உபரி மின்சாரத்தின் பெரும் பகுதியை விற்க வேண்டும் என்பதை நிதி ஆய்வாளர்கள் முடிவாகச் சொல்ல இயலும்.

இருந்தபோதிலும், பெரும்பாலான ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள் அணுகக்கூடிய அறிக்கைகளில் வெளியிடப்பட்ட நம்பிக்கையான நிதி கணிப்புகளின் அடிப்படையில், ஹைஃபி[Ϟ]ளக்ஸின் பங்கு விலையில் தங்கள் எதிர்பார்ப்புகளை மேம்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது.

ஹைஃப்ளக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஒலிவியா லாம் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கில் தற்காப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

மார்ச் 2011 அறிவிப்பில்  முக்கிய தகவல்களை வெளியிடாமல் மூடி மறைத்தது, முன்னுரிமைப் பங்குகளை வெளியிட்டது ஆகியவற்றின் தொடர்பில் அவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தவிந்தர் சிங், நிதி ஆய்வாளர்களால் அந்தத் தகவல்களைத் தாங்களாகவே கணக்கிட்டிருக்க முடியும் என்று வாதிட்டார். நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை மட்டுமல்லாமல், ஆய்வாளர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் நிதித் தகவல்கள் வெளிப்படையாகவும் தெரிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்