காற்பந்து நுழைவுச்சீட்டு சர்ச்சை; தெளிவுபடுத்திய எஃப்ஏஎஸ்

1 mins read
5f5522dd-994d-4c0e-8568-b8633fd46a71
நவம்பர் 18ஆம் தேதியன்று ஹாங்காங் குழுவுடன் சிங்கப்பூர் காற்பந்துக் குழு மோதுகிறது. Credit: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் - படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

சிங்கப்பூர்-ஹாங்காங் இடையிலான ஆசியக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்று காற்பந்தாட்டம் நவம்பர் 18ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் ஹாங்காங்கில் உள்ள காய் டாட் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இதற்கான நுழைவுச்சீட்டுகள் நவம்பர் 7ஆம் தேதியன்று விற்பனை செய்யப்பட்டன.

விற்பனை தொடங்கி 80 நிமிடங்களுக்குள் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்கப்பட்டன.

சிலர் நுழைவுச்சீட்டுகளை வாங்கிய விலையைவிட ஏறத்தாழ 17 மடங்கு அதிகமாக இணையம் வழி விற்பதாகக் கூறப்படுகிறது.

நுழைவுச்சீட்டு கிடைக்காத ஹாங்காங் ரசிகர்கள், சிங்கப்பூர் ரசிகர்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேடு குறித்து சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துக்குத் தெரியும் என்று அதன் செய்தித்தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் ரசிகர்கள் தங்கள் நுழைவுச்சீட்டுகளை வாங்க சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துக்குச் சொந்தமான பிரத்யேக இணையப்பக்கம் ஒன்று உள்ளது.

“சிங்கப்பூர் ரசிகர்கள் மட்டுமே இந்த நுழைவுச்சீட்டுகளை வாங்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“ஹார்பர் கிராண்ட் கௌலூன் ஹோட்டலில் அந்த நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்போது சிங்கப்பூர் அடையாள அட்டை அல்லது கடப்பிதழைக் காட்ட வேண்டும்,” என்று செய்தித்தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்