கேலாங்கில் அமலாக்க நடவடிக்கை; 16 வயது இளையர் உட்பட 22 பேர் கைது

2 mins read
e17dba6f-0fc2-4c39-81d9-3c8bb4bd948b
செப்டம்பர் 18ஆம் தேதி, சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 48 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டனர். - படங்கள்: சிங்கப்பூர்க் காவல்துறை

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 16 ஆடவர்களிடமும் ஆறு பெண்களிடமும் சிங்கப்பூர்க் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 18ஆம் தேதிக்கும் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிடோக் காவல் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

கேலாங் வட்டாரத்தில் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நோக்கில் அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதி இது என செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 11) சிங்கப்பூர்க் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள், சட்டவிரோதச் சூதாட்டம், சுகாதாரப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை, தீபாதுகாப்பு விதிமுறை மீறல் போன்ற குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. செப்டம்பர் 18ஆம் தேதி, சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 48 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஆறு ஆடவர்களில் ஒருவருக்குப் போதைப்பொருள் குற்றத்தில் தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 18க்கும் 26க்கும் இடையில் கேலாங் பகுதியில் இருக்கும் ஹோட்டல், உடற்பிடிப்பு நிலையங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, 41 வயது ஆடவரையும் 46 வயது மாதையும் சட்டவிரோதமாக உடற்பிடிப்பு நிலையம் ஒன்றை அப்பர் பூன் கெங் ரோட்டில் நடத்தி வந்ததற்காகக் கைது செய்தனர்.

பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல் அல்லது வழங்குதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 33 முதல் 42 வயதுக்குட்பட்ட இரு ஆடவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

செப்டம்பர் 19க்கும் 25க்கும் இடையில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ள சிகரெட் தொடர்பில் எழுவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 19ஆம் தேதி, தனிநபர் நடமாட்டச் சாதனத்தை மாற்றியமைத்த குற்றத்திற்காக மூவரை நிலப் போக்குவரத்து ஆணையம் கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்