குழந்தைத் தள்ளுவண்டியில் மறைக்கப்பட்ட மின்சிகரெட்டுகள்

1 mins read
3d8f2d8e-8649-48b8-8b77-d976ff64d3d6
காரின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தள்ளுவண்டி ஒன்றின் பாக்கெட்டில் இரண்டு மின்சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.   - படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

செப்டம்பர் 9ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது காரின் பின்பகுதியில் குழந்தைத் தள்ளுவண்டியில் மறைத்து வைத்து மின்சிகரெட்டுகளைக் கடத்தியதாக சிங்கப்பூரர் ஒருவர் பிடிபட்டதை அடுத்து அவருக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் கூடுதல் சோதனையை மேற்கொண்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், செப்டம்பர் 12 அன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அதிகாரிகள் தங்கள் சோதனையின்போது, காரின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குழந்தைத் தள்ளுவண்டி ஒன்றின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மின்சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.

மூன்றாவது மின்சிகரெட் அந்த ஆடவரின் பையில் இருந்தது.

மினசிகரெட் பயன்படுத்தும் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு $500யும் பெரியவர்களுக்கு $700யும் அபராதம் விதிக்கப்படலாம்.

இரண்டாம் முறையாகக் குற்றம் புரிபவர்களுக்கு மூன்று மாத மறுவாழ்வுப் பயிற்சி தண்டனையாக விதிக்கப்படும். அதன் பிறகு குற்றம் புரிபவர்களுக்கு அதிகபட்சம் $2,000 அபராதம் விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்