தெலுக் பிளாங்காவில் விபத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற ஓட்டுநர் கைது

1 mins read
bb28181c-7dd7-4d8b-90bd-1c6403dec401
நவம்பர் 4ஆம் தேதி தனது கார் சம்பந்தப்பட்ட ஒரு விபத்துக்குப் பிறகு அந்த நபர் அங்கிருந்து ஓடி தப்பிச் சென்றார். மறுநாள் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். - படங்கள்: ஷின்மின், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெலுக் பிளாங்காவில் நான்கு வாகனங்களுடன் தனது காரை மோதிய பின்னர் தப்பி ஓடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த 34 வயது நபர் நவம்பர் 5ஆம் தேதி காக்கி புக்கிட்டில் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 6), காவல்துறையினர் தெரிவித்தனர்.

நவம்பர் 4ஆம் தேதி காலை 8.30 மணியளவில் தெலுக் பிளாங்கா டிரைவில் தங்கள் அதிகாரிகள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஒரு கார் சாலைத் தடுப்பில் ஏறிச் சென்றதைக் கண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகள் அவரை சோதனை செய்துகொண்டிருந்தபோது அந்த ஓட்டுநர் திடீரென காரை ஓட்டிச் சென்றார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவரைத் துரத்திச் சென்றனர். அப்போது அந்த கார் இரண்டு கார்கள், ஒரு வேன், ஒரு பேருந்து ஆகியவற்றின் மீது மோதியது. பின்னர் ஓட்டுநர் தெலுக் பிளாங்கா ஹில்லில் ஓடியபடி தப்பிச் சென்றார்.

காரில் ஒரு மின்சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அது தொடர்பான குற்றம், சுகாதார அறிவியல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்படும் என்று காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்