சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, உள்துறை அமைச்சு ஆகியவற்றை ஏமாற்றி $130,000க்கும் அதிகமான தொகையைப் பறித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி மீதும் அவரது மனைவி மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
41 வயது முகம்மது ஸாஹிட் ரோஸ்லி, 28 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
குடிமைத் தற்காப்புப் பயிற்சிக் கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது அவர் இந்த மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது மனைவியான 38 வயது நூராய்ஃபா அகமது மீது 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இவர் குருண்டி வெல்னஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர்.
அதுமட்டுமல்லாது, கிளட்ச் எஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமாவார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் உள்துறை அமைச்சுடன் தமது மனைவியுடன் தொடர்புடைய இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் இணைய விண்ணப்பம் செய்தபோது அந்த நிறுவனங்களுடன் தமக்கு இருக்கும் தொடர்பை அவர் மறைத்துவிட்டார்.
இத்தம்பதியர் நவம்பர் 27ஆம் தேதியன்று குற்றத்தை ஒப்புக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.