சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்தின் மத்தியிலுள்ள ‘சோம்ப் சோம்ப்’ (Chomp Chomp) உணவங்காடி, திங்கட்கிழமை (அக்டோபர் 27) முதல் மூன்று மாதங்களுக்கு மூடப்படும்.
பழுதுபார்ப்புக்காகவும் புதுப்பிப்புப் பணிகளுக்காகவும் மூடப்படும் உணவங்காடி ஜனவரி 26ல் மீண்டும் திறக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தனது இணையத்தளத்தில் தெரிவித்தது.
இந்த உணவங்காடி கடைசியாக 2017ன் முற்பகுதியில் மூடப்பட்டு அதே ஆண்டில் சில மாதங்களுக்குப் பிறகு ஏப்ரலில் திறக்கப்பட்டடது.
‘சோம்ப் சோம்ப்’ உணவங்காடியைத் தவிர, மேலும் மூன்று இடங்கள் அக்டோபரில் தற்காலிகமாக மூடப்பட்டன.
சர்க்கிட் ரோட்டிலுள்ள 79, 78A ஆகிய புளோக்குகளிலும் ரெட்ஹில் உணவங்காடியிலும் உள்ள உணவங்காடி நிலையங்களிலும் பழுதுபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் பாசிர் பாஞ்சாங் உணவங்காடியும் இதுபோன்ற பணிகளுக்காக மூடப்படும். டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை அது மூடப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

