செங்காங், உட்லண்ட்ஸ், இயோ சூ காங் ஆகிய பேட்டைகளில் உள்ள குடியிருப்பாளர்கள் புதிய பொழுதுபோக்கு வசதிகளையும் புதிய சமூக மையத்தில் ஒரே கூரையின்கீழ் பல வசதிகளையும் எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே, வடமேற்கு வட்டாரத்தில் உள்ளோர் நான்கு புதிய பூங்காக்களை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம். அதிகாரிகள் கிராஞ்சி இயற்கை பாதைக்கான எதிர்காலத் திட்டங்களை மறுசீரமைத்தனர்.
மேக்ஸ்வெல் சாலையில் உள்ள நகர சீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் இந்தத் தகவல்களும் வெளியிடப்பட்டன.
ஆர்ச்சர்ட் சாலையில் பூங்கா, பே ஈஸ்ட் தோட்டத்தையும் டவுன்டௌனில் உள்ள மெரினா நிலையத்தையும் இணைக்கும் பாலம், புத்துயிரூட்டப்பட்ட ஜூரோங் ஹில், ஜூரோங் பறவைப் பூங்கா ஆகியவையும் திட்டத்தில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்.
ஒருங்கிணைந்த மையத்துக்கு ஓர் உதாரணம் தெம்பனிஸ் மையம். அங்கு வட்டார நூலகம், சமூக மன்றம், காற்பந்தாட்டத் திடல், உணவங்காடி நிலையம் என அனைத்தும் ஒரே கூரையின்கீழ் உள்ளன.
புதிய செங்காங் மையம், கம்பஸ் ஒன் கடைத்தொகுதிக்கு அருகே அமைந்திருக்கும். புதிய உட்லண்ட்ஸ் மையம் எதிர்வரும் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் கட்டமைப்பின் முனையத்துக்கு அருகே அமைந்திருக்கும்.
இயோ சூ காங் மையம் அதே வட்டாரத்தில் அமைந்திருக்கும் விளையாட்டு நிலையத்தில் அமைக்கப்படும்.
நான்கு புதிய பூங்காக்களும் கிராஞ்சி இயற்கைப் பாதையில் உள்ள நீர் நிலைகளுக்கு அருகே அமைந்திருக்கும். அங்கு 2028ஆம் ஆண்டு 72.8 ஹெக்டர் பரப்பரளவில் மண்டாய் சதுப்புநிலை இயற்கை பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நகர சீரமைப்பு ஆணையக் கண்காட்சியில் ஜூரோங் பறவை பூங்கா, ஜூரோங் ஹில் ஆகியவற்றுக்காக வெற்றிபெற்ற யோசனைகளும் இடம்பெற்றிருந்தன. 2024 அக்டோபரில் அந்த யோசனைகள் சமர்பிக்கப்பட்டன.
ஜூரோங் தொழிற்பேட்டையுடன் ஒருங்கிணைந்த அந்த 39 ஹெக்டர் வட்டாரத்தை வேலைக்கும் விளையாட்டுக்குமான வட்டாரமாக மற்ற அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.
இதற்கிடையே, நகரத்தின் மையப் பகுதியில் தற்போதிருக்கும் இஸ்தானா பூங்காவையும் டோபி காட் கிரீன் வட்டாரத்தையும் இணைத்து புதிய பூங்கா உருவாக்கப்படவிருக்கிறது.