சிங்கப்பூர் வானில் பிரகாசமாகக் காட்சியளித்த ‘பீவர்’ நிலவு

1 mins read
6b1cd5d3-63f8-4bb1-a541-023330ac5280
மவுண்ட் ஃபேபருக்கும் செந்தோசாவுக்கும் இடையே செல்லும் கம்பிவட காருக்குப் பின்னணியில் ‘பீவர்’ நிலவு. - படம்: சாவ்பாவ்

வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், சிங்கப்பூரில் புதன்கிழமை (நவம்பர் 5) இரவு ‘பீவர்’ நிலவு எனும் பெருநிலவு பிரகாசமாகக் காட்சியளித்தது. 2025ல் தோன்றும் மூன்று பெருநிலவுகளில் இது இரண்டாவதாகும்.

‘பீவர்’ நிலவின் ஒளி இரவு 7.30 மணியளவில் உச்சத்தை எட்டியது. வழக்கத்தைவிட பெரிதாகவும் வெளிச்சமாகவும் அது தோன்றியது. சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாசகர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பி வைத்தனர். சமூக ஊடகங்களிலும் இணையவாசிகள் படங்களைப் பதிவேற்றம் செய்தனர்.

2025ல் வியாழக்கிழமை (நவம்பர் 6) பூமிக்கு மிக அருகில் நிலவு இருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் உள்ள ஆய்வகம் கூறியது.

2025ன் முதல் முழுநிலவான ‘ஹார்வெஸ்ட்’ நிலவு அக்டோபர் 7ஆம் தேதி தோன்றியது. 2025ன் கடைசி முழுநிலவான ‘கோல்ட்’ நிலவு டிசம்பர் 4ஆம் தேதி தோன்றும்.

குறிப்புச் சொற்கள்