சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் மாதாந்திரச் சந்திப்பை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் கவிமாலையின் 303ஆவது சந்திப்பு சனிக்கிழமை, ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6மணிக்குத் தேசிய நூலகத்தில் உள்ள த போட்டில் நடைபெறுகிறது.
கூட்டத்தின் சிறப்பு அங்கமாக கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வழிநடத்தும் ‘பாதிப்பும் படைப்பும் கவிதையும் காரணமும்’ அங்கம் இடம்பெறுகிறது. கவிதையில் நாட்டுப்பற்று எனும் தலைப்பில் முனைவர் மா. அருணச்சலத்தின் உரையும், ஓவியா இளங்கோவனின் ‘மருந்தும் தமிழும்’ எனும் சிறப்பு அங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தேசிய தினத்தையொட்டி ‘அழகின் வயது 60’ எனும் கவிதை வாசிக்கப்படும்.
ஆகஸ்ட் மாதத்துக்கான கவிதைப் போட்டிகளில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதைகள் வாசிக்கப்படுவதுடன் பரிசளிப்பு போன்ற அங்கமும் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு 9060 4464 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.