தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்போடிய மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய $150 மில்லியன் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

2 mins read
51c35fe3-8541-4aff-b2b0-134fd0ed1d5f
சொகுசுக் கப்பல், யோட் (yacht) எனும் சொகுசுப் படகு, 11 கார்கள், விலையுயர்ந்த மதுபானப் போத்தல்கள் ஆகியவற்றை முடக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

கம்போடிய வர்த்தகர் சென் சியுடனும் அவரது நிறுவனமான பிரின்ஸ் குழுமத்துடனும் சம்பந்தப்பட்ட ஆறு சொத்துகளையும் பல்வேறு நிதிச் சொத்துகளையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கான தடையை விதித்துள்ளனர்.

பணமோசடி, போலித் தகவல் ஆகிய குற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வங்கிக் கணக்குகள், ரொக்கம் என சென் சியுடன் தொடர்புடைய சொத்துகளின் மதிப்பு $150 மில்லியனுக்கும் அதிகம் என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தது.

அவற்றுடன் சொகுசுக் கப்பல், யோட் (yacht) எனும் சொகுசுப் படகு, 11 கார்கள், விலையுயர்ந்த மதுபானப் போத்தல்கள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பன்னாட்டு வர்த்தகக் குழுமமான பிரின்ஸ் குழுமம், கம்போடியாவில் உல்லாசத் தங்குமிடங்களையும் ஹோட்டல்களையும் நடத்துகிறது.

சீனாவின் ஃபூஜியெனைச் சேர்ந்த சென் வின்சென்ட் என்று அவர் அறியப்படுகிறார். அவர் இணைய மோசடியிலும் பணமோசடியிலும் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கம்போடியாவில் உள்ள மோசடி நிலையங்களில் வேலைசெய்யும்படி கட்டாயப்படுத்தி ஆட்களைச் சேர்ப்பதிலும் சென் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் தப்பிச்சென்ற குற்றச்சாட்டையும் சென் எதிர்நோக்குகிறார்.

பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய இணைய மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்ட நைஜல் டேங், சென் சியூலிங், அலன் இயோ ஆகிய மூன்று சிங்கப்பூரர்கள்மீதும் அமெரிக்கா இம்மாதம் 14ஆம் தேதி தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துகளை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

குறைந்தது 15 பில்லியன் யுஎஸ் டாலர் (S$19.5 பில்லியன்) மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்கள், மில்லியன்கணக்கான டாலர் மதிப்புடைய சொத்துகள், லண்டன், பாலாவ் என்ற பசிபிக் தீவில் உள்ள சொத்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

சென்னும் அவருடன் சம்பந்தப்பட்டோரும் தற்போது சிங்கப்பூரில் இல்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.

சென்னையும் அவருடன் தொடர்புடையோர் பற்றியும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை புகார் அலுவலகத்திற்குக் கிடைத்த நிதித் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கின.

அதிகாரிகள் விசாரணை தொடர்கிறது.

வங்கிக் கணக்குகள், ரொக்கம் என சென் சியுடன் தொடர்புடைய சொத்துகளின் மதிப்பு $150 மில்லியனுக்கும் அதிகம் என்று காவல்துறை தெரிவித்தது.
வங்கிக் கணக்குகள், ரொக்கம் என சென் சியுடன் தொடர்புடைய சொத்துகளின் மதிப்பு $150 மில்லியனுக்கும் அதிகம் என்று காவல்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை
குறிப்புச் சொற்கள்