தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் சோதனைச்சாவடியில் விபத்து; மருத்துவமனையில் மோட்டார் சைக்கிளோட்டி

1 mins read
ec147dd0-87b1-46b8-b9ff-e6ba61f25e3f
501 ஜாலான் அகமது இப்ராஹிம் சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடு இழந்து சறுக்கியது என நம்பப்படுவதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின. - படம்: SINGAPORE ROADS ACCIDENT.COM/ஃபேஸ்புக்

துவாஸ் சோதனைச்சாவடியில் சனிக்கிழமை (ஜூன் 28) விபத்து ஏற்பட்டது. அதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயமடைந்தார்.

அந்த 23 வயது ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 3.25 மணி அளவில் 501 ஜாலான் அகமது இப்ராஹிம் சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடு இழந்து சறுக்கியது என நம்பப்படுவதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

மற்றொருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்