சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டில் 4 வாகனங்கள் தொடர்புடைய விபத்து

1 mins read
இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்
275c709c-4f50-405a-8172-c8d8ce88b496
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) இரவு 7.40 மணியளவில் சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டில் நடந்த விபத்தை அடுத்து சைக்கிளோட்டியும் மோட்டார்சைக்கிளோட்டியும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். - படம்: சிங்கப்பூர் இன்சிடென்ட்ஸ்/ஃபேஸ்புக் காணொளி

நியூ அப்பர் சாங்கி ரோட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடந்த விபத்தை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஒரு வேன், இரு மோட்டார்சைக்கிள்கள், ஒரு சைக்கிள் என நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

52 வயதுச் சைக்கிளோட்டியும் 53 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர். மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்