ஜாலான் புக்கிட் மேராவில் 71 வயது ஆடவர், 139வது புளோக்கின் கீழே அசைவின்றி கிடந்தார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அச்சம்பவம் நடந்தது.
அவரைப் பரிசோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் ஆடவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.
இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தப்பட்ட அச்சம்பவம் குறித்து தங்களுக்கு நவம்பர் 16ஆம் தேதி காலை 6.30 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை மதர்ஷிப்பிடம் கூறியது.
அன்றைய தினம் 9 மணியளவில் அந்தப் புளோக்கின் கீழே நீள நிறக் கூடாரம் ஒன்றைப் பாத்ததாக மதர்ஷிப் வாசகர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, அந்த மரணத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.

