தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 17 பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ef39775d-bbae-45e3-99a8-fc872a0bf167
ரங்கூன் சாலையில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்தவாறு தூங்கியதாக 30 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 17 பேர் மீது வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 28) குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 27 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது இவர்கள் சிக்கினர்.

இந்த 17 பேரில் இருவர் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவர்.

அவர்கள் தங்கள் கார்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு கார்களுக்குள் இருந்தவாறு தூங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மற்ற வாகனங்களுக்கு அவர்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த 30 வயது, 35 வயது ஆடவர்கள் இக்குற்றத்தை ரங்கூன் சாலையிலும் தெம்பனிஸ் அவென்யூ 5லும் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காரை சாலையில் நிறுத்தியதால் மற்ற கார்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும் அவர்களது செயல் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை, $2,000லிருந்து $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்