தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியில் 15 பேருக்குக் குடல் அழற்சி பாதிப்பு

1 mins read
60f83870-2d63-45b7-a213-97a1ccb59441
பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளின் உடல்நலத்தையும் பள்ளி ஊழியர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறினர். - படம்: கூகல் மேப்ஸ்

ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளுக்குக் குடல் அழற்சிக்கான அறிகுறிகள் இருப்பதாக அக்டோபர் 1ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அக்டோபர் 2ஆம் தேதியே அவர்கள் பள்ளிக்குத் திரும்பிவிட்டனர் என்றும் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 7) சிங்கப்பூர் உணவு அமைப்பும் ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியும் தொற்றுநோய் தடுப்பு நிலையமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளின் உடல்நலத்தையும் பள்ளி ஊழியர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், ‘பேரன்ட்ஸ் கேட்வே’ செயலி வழியாகப் பெற்றோருக்கு இச்சம்பவம் தொடர்பான விவரங்களை அப்பள்ளி தெரிவித்ததாகவும் அதிகாரிகளுடன் விசாரணைக்குத் தொடர்ந்து அது உதவி வருவதாகவும் அக்கூட்டறிக்கை குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் ‘நூடல்ஸ்’ சாப்பிட்டனர் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்துகொள்கிறது.

குறிப்புச் சொற்கள்