வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் முதல் பரிசான $12.5 மில்லியன் தொகையை மூவர் வென்றனர்.
இதற்கு முந்தைய மூன்று குலுக்கல்களில் எவரும் முதல் பரிசுத்தொகையை வெல்லாத காரணத்தால் முதல் பரிசுத் தொகை கூடியது.
வியாழக்கிழமை முதல் பரிசை பெற்றுத் தந்த எண்கள், 10, 11, 16, 24, 34, 35 என்றிருக்க உபரி எண்ணாக 1 என்ற எண் அமைந்தது.
முதல் பரிசுத்தொகை ஆகஸ்ட் 18ஆம் தேதி $1.8 என்றிருந்தது ஆகஸ்ட் 25ஆம் தேதி $5.81 மில்லியன் வரை சென்றது.
முதல் பரிசுத்தொகை பெற குலுக்கலில் வரும் எண்களில் 6ஐ ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இதன்படி, எந்த ஒருவருக்கும் குலுக்கலில் வந்த ஆறு எண்கள் விழவில்லை என்றால் பரிசுத் தொகை அடுத்த குலுக்கலில் சேர்த்துக்கொள்ளப்படும். இது இப்படியே நான்கு சேர்க்கை வரும்வரை தொடர்ந்து செல்லும்.
அப்படியும் முதல் பிரிவில் வெற்றியாளர்கள் இல்லாதுபோது பரிசுத்தொகையை இரண்டாம் பிரிவில் உள்ளவர்கள் பங்குபோட்டுக்கொள்வர்.
முதல் பரிசுத் தொகையை பங்கிட்டு கொண்ட மூவரில் இருவர் சிங்கப்பூர் பூல்ஸ் இணையச் சேவை மூலம் டோட்டோ சீட்டுகளை வாங்கினர். மூவரில் மற்றொருவர் சிம் லிம் ஸ்குவேரில் உள்ள டோட்டோ நிலையத்தில் சீட்டு வாங்கினார்.