முதல் பரிசுத் தொகையாக 10 மில்லியன் வெள்ளியை வழங்கக்கூடிய டோட்டோ குலுக்கல் முடிவுகள் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வெளிவரும்.
கடந்த மூன்று டோட்டோ குலுக்கல்களில் முதல் பரிசு வெற்றியாளர்கள் யாரும் இல்லை.
இம்மாதம் 18ஆம் தேதி டோட்டோ முதல் பிரிவில் (Group 1) பரிசுத் தொகை 1.2 மில்லியன் வெள்ளியாக இருந்தது. பிறகு இம்மாதம் 22ஆம் தேதி அத்தொகை சுமார் மூன்று மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்தது என்று சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (செப்டம்பர் 25) இடம்பெற்ற முதல் பிரிவு குலுக்கலுக்கான பரிசுத் தொகை 5.6 மில்லியன் வெள்ளி. அதிலும் வெற்றியாளர்கள் யாரும் இல்லை.
கடந்த மூன்று குலுக்கல்களிலும் யாரும் முதல் பரிசை வெல்லாததால் முதல் பரிசுத் தொகை 10 மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்துள்ளது.

