$1.2 மில்லியன் திருப்பித் தரவேண்டிய ‘த புரொஜெக்டர்’

1 mins read
09733b5e-2ec8-4aa6-9958-8f06788d81b8
த புரொஜெக்டர் திரையரங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தன்னிச்சைத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் திரைப்படங்களைத் (independent movies) திரையிட்டுவந்துள்ள சிங்கப்பூரின் ‘த புரொஜெக்டர்’ திரையரங்கம், 1.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கடனாகத் திருப்பித் தரவேண்டியிருக்கிறது.

இத்தகவலை ‘த புரொஜெக்டர்’ தெரிவித்துள்ளது. தங்களுக்குக் கடன் தந்த தரப்பினருடன் அது இம்மாதம் 29ஆம் தேதி சந்திப்பு நடத்தவுள்ளதை முன்னிட்டு இத்தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலைக் கொண்ட மின்னஞ்சலை ‘த புரொஜெக்டர்’, நேற்று (ஆகஸ்ட் 19) கடன் தந்த தரப்பினருக்கு அனுப்பியது. அந்த மின்னஞ்சலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்டது.

‘த புரொஜெக்டர்’ர் கடனைத் திருப்பித் தரவேண்ய 33 தனிநபர்கள், அமைப்புகள் குறித்த விவரங்கள் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது. ஓவர்சீஸ் மூவி (Overseas Movie) நிறுவனத்திற்குத்தான் ‘த புரொஜெக்டர்’ ஆக அதிகமாக 382,888.03 வெள்ளிக் கடனைத் திருப்பித் தரவேண்டும். ‘த புரொஜெக்டர்’ இயக்குநரான கேரன் டானும் கடன் திருப்பித் தரவேண்டியோரில் அடங்குவார்.

திருவாட்டி டான், அதன் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். ‘த புரொஜெக்டர்’, திருவாட்டி டானிடம் 120,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திருப்பித் தரவேண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்