தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்டியுசி தேசிய தினக் கொண்டாட்ட நுழைவுச்சீட்டுகளுக்கான பதிவு தொடக்கம்

1 mins read
57b6c7af-83e5-413b-a7dc-699255585338
2024ஆம் ஆண்டு நடந்த என்டியுசி தேசிய தின அணிவகுப்பு கொண்டாட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள். - படம்: என்டியுசி

பல உள்ளூர்க் கலைஞர்கள், சுவாரசியமான நிறுவல்கள், நடவடிக்கைகள் எனப் பற்பல உற்சாகமான நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டிற்கான என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.

அவ்விழாவின் நுழைவுசீட்டுகளுக்கான பதிவு தொடங்கியுள்ளது. http://ndpbaycelebrations.ntuc.org.sg/ என்ற இணையத்தளம் வழியாக பொதுமக்கள் இரண்டு இலவச நுழைவுசீட்டுகளுக்குப் பதிவு செய்யலாம். அதற்கான கடைசி நாள் ஜூலை 4.

ஜூலை 26, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 9 என மூன்று சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மரீனா பேவின் புரோமோன்டரியில் (Promontory) இக்கொண்டாட்டம் நடைபெறும்.

அம்மூன்று கொண்டாட்டங்களில் ஒருவர் ஒரு கொண்டாட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நுழைவுச்சீட்டுகளைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு அதுபற்றி தகவல் ஜூலை 8ஆம் தேதிக்குள் தெரிவிக்கப்படும்.

நாட்டின் வளர்ச்சியில் இளையர்களின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் ‘மாஜுலா எஸ்ஜி யூத்’ என்ற கருப்பொருளோடு இவ்விழா நடைபெறவுள்ளது.

அத்துடன், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஷபீர் உட்பட பல உள்ளூர்க் கலைஞர்களின் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் இக்கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ளன.

இருவழித்தொடர்புடைய மூன்று நிறுவல்களும் ஒஒர் ‘என்டியுசி’ சாவடியும் அமைக்கப்படுவதோடு, இளைஞர்களுக்கான பல நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்