வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின ஒற்றுமை கிண்ணம்

மே தினத்தன்று காலையில் ‘ஆக்டிவ் ஃபையர்’ நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்காக இரண்டாம் ஆண்டாக ஒற்றுமை கிண்ணப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.

வெளிநாட்டு ஊழியர் நிலையம், ‘ஃபோர்ட்டிஸ்’, ‘ஃபியூஷன் சேஃப்டி’ ஆகியவற்றின் ஆதரவோடு போட்டிகள் சூன் லீ பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்றன.

இவ்வாண்டு கிரிக்கெட்டோடு புதிதாக ‘ஃபுட்சல்’ காற்பந்துப் போட்டிகளும் இடம்பெற்றன.

இவ்வாண்டு ‘ஃபுட்சல்’ காற்பந்துப் போட்டிகள் புதிதாக நடைபெற்றன. எட்டு அணிகள் பங்குபெற்றன. முதல் மூன்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. படம்: ரவி சிங்காரம்

போட்டிகளில் பங்கேற்றோர் பெரும்பாலும் ‘ஆக்டிவ் ஃபையர்’ மற்றும் அதன் பங்காளித்துவ நிறுவனங்களின் வெளிநாட்டு ஊழியர்களே. காற்பந்தில் மற்ற காற்பந்து அணிகளும் பங்குபெற்றன.

வெளிநாட்டு ஊழியர்களை வேலையிடப் பாதுகாப்பில் தலைமைத்துவம் காண்பிக்க ஊக்குவிக்கும் ‘ஃபியூஷன் சேஃப்டி’யின் ‘ஹீரோகோட்’ எனும் இயக்கத்தை ஏற்று ‘ஆக்டிவ் ஃபையர்’ இப்போட்டிகளை நடத்துகிறது.

வேலையிடப் பாதுகாப்பை நிலைநாட்ட உறுதிபூண்ட வெளிநாட்டு ஊழியர்களும் நிறுவனத்தாரும். படம்: ரவி சிங்காரம்

அதனால், போட்டிகளின் தொடக்கத்தில், ‘வேலையிடப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம்’ என்ற உறுதிமொழியை வெளிநாட்டு ஊழியர்களும் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினரும் எடுத்தனர். உறுதிமொழிப் பதாகையில் கையெழுத்தும் இட்டனர்.

ஹீரோகோடைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் வேலையிடப் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதிப்படுத்தவேண்டும்.
‘ஃபியூஷன் சேஃப்டி’ நிர்வாக இயக்குநர் ஷாவால் முகமது.

கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கிடையே ஓர் ஆட்டம் நடைபெற்றது. ஆறு ஓவர்களில் 32 ஓட்டங்கள் எடுத்த ‘டெக்னிக்ஸ்’ அணி, ‘ஆக்டிவ் ஃபையர்’ அணியை ஓர் ஓட்ட வித்தியாசத்தில் வென்றது.

கிரிக்கெட்டில் மோதிய ‘டெக்னிக்ஸ்’, ‘ஆக்டிவ் ஃபையர்’ அணிகள். படம்: ரவி சிங்காரம்

“தொழிலாளர்களுக்கு இப்போட்டிகள் மே தினத்தன்று பெருமகிழ்ச்சியளித்தன. அடுத்த ஆண்டு கூடுதல் அணிகளோடு கூடுதல் ஆட்டங்களை விளையாட விரும்புகிறோம், என்றார் ‘டெக்னிக்ஸ்’ அணித் தலைவர் லியோ டி சோசா, 42.

‘ஃபுட்சல்’ காற்பந்துப் போட்டியில் வென்றது ‘ஆக்டிவ் ஃபையர்’ பொறியாளர்கள் தொடங்கிய ‘மேமத்’ அணி.

முதல் பரிசாக $500, இரண்டாம் பரிசாக $300 மதிப்புள்ள ‘என்டியுசி’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. போட்டியாளர்கள் அனைவருக்கும் $7 உணவுப் பற்றுச்சீட்டுகளும் கொடுக்கப்பட்டன.

இந்தியா, பங்ளாதேஷிலுள்ள பள்ளிகளுக்கான நிதி திரட்டலும் நடைபெற்றது. வெளிநாட்டு ஊழியர்கள், நிறுவனத்தாரின் நன்கொடைகளால் சுமார் $3,000 திரட்டப்பட்டதாகக் கூறினார் ‘ஆக்டிவ் ஃபையர்’ இயக்குநரும் போட்டி ஏற்பாட்டாளருமான ராமலிங்கம் வடிவேல்.

இந்தியா, பங்ளாதேஷிலுள்ள பள்ளிகளுக்கான நிதி திரட்டுக்கு நன்கொடையளிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!