‘ஓய்வு நாள்களிலும் தொண்டூழியத்துக்கு ஓய்வில்லை’

டான் டோக் செங் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்தின் துணைத் தாதிமைத் திட்டத் தொண்டூழியர்கள்

வாரத்தில் தனக்குக் கிடைப்பது ஒரு நாள் ஓய்வுதான். அப்போதும் வயதான நோயாளிகளைப் பராமரிக்க டான் டோக் செங் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்திற்குச் (ஐசிஹெச்) செல்கிறார் இந்தோனீசிய பணிப்பெண் திருவாட்டி ஹண்டாயனி, 38.

வயதானோரைப் பார்த்துக்கொள்ளும்போது, எழுபதுகளில் இருக்கும் தன் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது போன்ற உணர்வு தனக்கு ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.

ஈராண்டுகளாக பெங்களூரில் தாதியாகப் பணிபுரிந்த கேதரின் விஜி, 38, 2011ல் திருமணமாகி சிங்கப்பூருக்கு வந்தார். இங்கு வந்ததும் தாதியாகத் தொடரவேண்டும் என்ற கனவு இருந்தது. சமீபத்தில், டான் டோக் செங் ‘ஐசிஹெச்’சில் அவருக்கு வாய்ப்பு கிட்டியது.

விஜி, ஹண்டாயனி இருவரும் டான் டோக் செங் ‘ஐசிஹெச்’ துணைத் தாதிமைத் திட்டத்தில் தொண்டூழியர்களாகப் பணிபுரிகின்றனர்.

டான் டோக் செங் ‘ஐசிஹெச்’ துணைத் தாதிமைத் திட்டத் தொண்டூழியர் கேதரின் விஜி, 38, முன்கூட்டியே இந்தியாவில் தாதியாக ஈராண்டுகள் பணியாற்றியவர். படம்: ரவி சிங்காரம்
முதியோரைப் பராமரிப்பதில் எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. அவர்கள் இனம், சமயம், மொழி பாராது என்னைத் தம் மகளாகக் கருதுகின்றனர்.
டான் டோக் ‘ஐசிஹெச்’ துணைத் தாதிமைத் திட்டத் தொண்டூழியர் கேதரின் விஜி, 38.

கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இத்திட்டத்தில் இதுவரை பங்கேற்றுள்ள 120க்கும் மேற்பட்ட வழக்கமான தொண்டூழியர்களில் இவர்கள் அடங்குவர். இவர்களில் தாதிமை மாணவர்கள், இல்லப் பணிப்பெண்கள், இல்லத்தரசிகளும் அடங்குவர்.

ஏப்ரல் 28ஆம் தேதி, இத்திட்டத்தில் 30 புதிய தொண்டூழியர்களும் சேர்ந்தனர்.

இத்திட்டத்தின்மூலம் ‘ஐசிஹெச்’சில் உள்ள நோயாளிகளுக்கு இவர்கள் நாள்தோறும் அல்லது வாரந்தோறும் இரண்டு, மூன்று மணி நேரம் பராமரிப்பு வழங்குவர்.

‘ஐசிஹெச்’சில் மூளை, முதுகெலும்பு பிரச்சினைகள், உடலுறுப்பு இழப்பு போன்றவற்றால் கூடுதல் பராமரிப்புத் தேவைப்படுவோர், சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைய உதவி தேவைப்படும் நோயாளிகள், கடைசிக் கட்டத்தில் உள்ள நோயாளிகள் ஆகியோர் இருக்கின்றனர்.

துணைத் தாதிமைத் தொண்டூழியர்கள், தாதியருக்குப் பெருமளவில் துணைபுரிகின்றனர். படத்தில் ஒரு தாதியருக்கு உதவும் தொண்டூழியர் கேதரின் விஜி, 38 (வலம்). படம்: டான் டோக் செங் மருத்துவமனை
தங்கள் நேரத்தைக் கொடுக்கும் தொண்டூழியர்களுக்கு நான் நிஜமாகவே கைகூப்பி நன்றி கூறுவேன். ஓய்வு நாள்களில் அவர்கள் வெளியில் செல்லலாம். ஆனால் அவர்கள் நோயாளிகளைப் பார்த்துக்கொள்கிறார்கள்.
டான் டோக் ‘ஐசிஹெச்’ துணைத் தாதிமைத் திட்டத்திற்குத் தலைமை தாங்கும் மூத்த தாதிமை மேலாளர் பத்மாவதி கிருஷ்ணன், 66.

“இதுபோன்ற ஒரு மனப்பக்குவம் வருவது அரிது. நோயாளிகளைக் கழிவறைக்குக்கூட அழைத்துச் செல்லவேண்டும். நோய்கள் இருக்கலாம். பலரும் இதை விரும்பமாட்டார்கள். அதனால், இதைச் செய்ய முன்வருபவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன்,” என்றார் இத்திட்டத்தை முன்மொழிந்து, அதற்குத் தலைமை தாங்கும் மூத்த தாதிமை மேலாளர் பத்மாவதி கிருஷ்ணன், 66.

டான் டோக் ‘ஐசிஹெச்’ துணைத் தாதிமைத் திட்டத்திற்குத் தலைமை தாங்கும் மூத்த தாதிமை மேலாளர் பத்மாவதி கிருஷ்ணன், 66. தாதியாக 49 ஆண்டு அனுபவம் கொண்ட இவர், டான் டோக் செங்கிற்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்புக்காக 2022ல் ‘எமெரிட்டஸ்’ விருதும் பெற்றுள்ளார். படம்: ரவி சிங்காரம்

இத்திட்டம் வழங்கும் முறையான பயிற்சி, தொண்டூழியர்களுக்குப் பயனளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

“வீட்டில் முதியோரை ஓரிடத்திலிருந்து நகர்த்தும்போது சரியான முறையில் செய்யாவிட்டால் அவர்களுக்கு இடுப்புவலி ஏற்படும். நாங்கள் கற்பிக்கும் உத்திகள் வீட்டிலும் உதவுவதால் தொண்டூழியர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்,” என்கிறார் பத்மாவதி.

16 வயதுக்கு மேற்பட்டோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓராண்டுகாலமாவது பங்குபெறவேண்டும். இதற்கு தாதிமை அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க https://www.ttsh.com.sg/About-TTSH/Volunteer-at-TTSH/Pages/default.aspx இணையத்தளத்தை நாடலாம்.

எதிர்காலத்தில் சிறுநீர் நீக்கக் குழாய் பராமரிப்பு, விழுவதைத் தடுத்தல், மூக்கு-இரைப்பைக் குழாய் உணவளித்தல், நட்புத் திறன்கள் போன்றவையும் கற்பிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!