எழுத்தாளரும் கவிஞருமான வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் ‘செவகாளி’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது.
‘மற்றும் குழுவினர்’ அமைப்பும் அலர் பதிப்பகமும் அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஒன்பது சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல், கீதாரிகளின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
நூலைப் பற்றிய உரையினை எழுத்தாளர் அழகுநிலாவும் திரு வினோத்தும் வழங்கினர்.
தாலாட்டு, ஆவணப்படம், மேய்ச்சல் நிலம் என கீதாரிகளின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட காணொளிகள், செந்தில்குமார், வினோத் இருவரின் தயாரிப்பில், நேர்த்தியான இசைக்கோவையுடன், சிறப்பாகத் தொகுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
தமது புல்லாங்குழல் இசையால் குமார் மோகன் அனைவரையும் ஈர்த்தார்.
சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியனும் எழுத்தாளர் லதா அருணாச்சலமும் நூலினை வெளியிட, யாழிசைப் பதிப்பக உரிமையாளர் இளங்குமரனாரும் தொழிலதிபர் நாணற்காடனாரும் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியை மோகன் ஹரிவர்த்தினி வழிநடத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
நூலைப் பெற விரும்புவோர் 82845930 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

