கிரேஸ் லாட்ஜ் தாதிமை இல்லத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு தீபாவளி உணர்வைக் கொண்டுவந்தனர் என்பிஎஸ் அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள்.
மகிழ்ச்சியான, அனைவரையும் உள்ளடக்கிய தீபாவளிக் கொண்டாட்டத்தை வழிநடத்தியதன் மூலம் தலைமுறைகளுக்கு இடையேயான, பண்பாட்டுப் பிணைப்பை வளர்க்க ஒரு வாய்ப்பாக அக்கொண்டாட்டம் அமைந்தது.
கிரேஸ் லாட்ஜ் தாதிமை இல்லத்தின் தொண்டூழியர்களுடன் கைகோத்து, மாணவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
கிரேஸ் லாட்ஜ் இல்லத்தில் அக்டோபர் 12ஆம் தேதி நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில், செங்காங் அடித்தள அமைப்புக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்துல் முஹாய்மின், டாக்டர் ஜேமஸ் லிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 90 குடியிருப்பாளர்களை மகிழ்வித்த இந்த நிகழ்ச்சி, முதியோர் இல்லத்திற்கான ஏற்பாட்டுக் குழுவில் இளையர்கள் பெரும்பான்மையாக இடம்பெற்ற முதல் நிகழ்ச்சியாகும்.