புதுடெல்லி: நீட் தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் ஆறு தமிழக மாணவர்கள் இடம்பெற்று அசத்தி உள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) ஜூன் 15 அன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 2,209,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 1,236,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
* 551 முதல் 600 மதிப்பெண்கள் வரை 10,658 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
* 601 முதல் 650 மதிப்பெண்கள் வரை 1,259 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
* 651 முதல் 686 மதிப்பெண்கள் வரை 73 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 135,715 மாணவர்கள் நீட் தேவை எழுதினர். இவர்களில், 76,181 பேர் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.
தமிழக மாணவர்கள் சாதனை
6 தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 27வது இடமும் பிடித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
* அபிநித் நாகராஜன்- 50வது இடம், புகழேந்தி- 61வது இடம், ஹிருதிக்- 63வது இடம், ராகேஷ்- 78வது இடம், பிரஜன் ஸ்ரீவாரி- 88வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இலவச நீட் பயிற்சியும் இலவச இணையம், திறன்பேசியும் கிடைத்ததால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் ஷ்ரவன் குமார்.
ராஜஸ்தானின் பலோத்ரா நகர் அருகில் உள்ள கட்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் (19). இவரது பெற்றோர் திருமணம், இதர விழாக்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளிகளாகப் பணியாற்றுகின்றனர்.
அதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிடைக்கும் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு அதில் கிடைக்கும் ஊதியத்தை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஷ்ரவன் குமாரும் படித்துக்கொண்டே அருகில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
குடும்பத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும் ஷ்ரவன் குமார் அரசுப் பள்ளியிலேயே படித்து 10ஆம் வகுப்பில் 97 விழுக்காட்டு மதிப்பெண்ணும் 12ஆம் வகுப்பில் 88 விழுக்காட்டு மதிப்பெண்ணும் பெற்றார்.
ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் உள்ள அரசு மருத்துவர்கள், ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுப் பயிற்சி அளித்துள்ளனர். அங்கு சேர்ந்த ஷ்ரவன் குமார் பயிற்சி பெற்றுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தார்.
ராஜஸ்தானில் உள்ள 3 அல்லது 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஷ்ரவன் குமாருக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இத்தகவல் அவர்கள் வசிக்கும் கிராமத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தது. கிராம மக்கள் ஷ்ரவன் குமார் வசிக்கும் குடிசை வீட்டுக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஷ்ரவன் குமார் கூறுகையில், ‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை பிளஸ் 2 முடித்தபின் படிப்பது பற்றி நான் கற்பனை கூட செய்யவில்லை. எங்கள் கிராமத்துக்கு 2022ஆம் ஆண்டுதான் மின்வசதி கிடைத்தது.
“என் அம்மாவுக்கு மாநில அரசின் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு இலவச இணைய வசதியுடன் திறன்பேசி கிடைத்தது. மின் இணைப்பு கிடைத்ததால், அதிக நேரம் படிக்க முடிந்தது.
“இணைய இணைப்பால் வெளியுலகம் பற்றி அறிய முடிந்தது. நீட் தேர்வு எழுத இலவச பயிற்சியும் கிடைத்ததால் 4,071வது இடத்தைப் பிடிக்க முடிந்தது,’’ என்றார்.