உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் தீவிரம்

1 mins read
1d657acc-cbf4-4751-b11e-868fd4740d26
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டதில் பல வீடுகள், வாகனங்கள் நீரில் மூழ்கின. - படம்: ராய்ட்டர்ஸ்

பட்வாடி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தை வெள்ளம் புரட்டி எடுத்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு வெள்ளம் கரைபுரண்டோடி, நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் நால்வர் மாண்டனர். பலரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டதில் பல வீடுகள், வாகனங்கள் நீரில் மூழ்கின. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டதில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நடவடிக்கை துரிதமான முறையில் நடைபெற ஹெலிகாப்டர் மூலம் செல்லும் மீட்புப் பணியாளர்களுக்குத் தேவையான செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்படும் மீட்புப் பணிகள் இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) தொடங்கியதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்