ஹைதராபாத்தில் தயாராகிறது ரஃபேல் போர் விமான பாகங்கள்

1 mins read
b7b229f9-7551-4602-b339-4162101b720a
போர் விமான பாகங்கள் உருவாகின்றன. - படம்: ஊடகம்

திருப்பதி: ரஃபேல் போர் விமானத்தின் உடற்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியே‌ஷனும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிட்டெட்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதற்காக டாடா நிறுவனம் ஹைதராபாத்தில் அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

ரஃபேல் போர் விமானத்தில் உடற்பகுதியான பக்கவாட்டு ஓடுகள் பின்புறப்பகுதி மத்திய உடற்பகுதி மற்றும் முன்பகுதியை தயாரிக்க உள்ளது.

இந்த தொழிற்சாலை மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயார் செய்யும் திறனை கொண்டதாக இருக்கும். 2028ஆம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரெஞ்சு நாட்டிற்கு வெளியே ரஃபேல் போர் விமான பாகங்கள் ஹைதராபாத்தில் முதல் முறையாக தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்