ஐந்து குட்டிகளை ஈன்ற சிறுத்தை; உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பில் சாதனை

2 mins read
2f8ade9c-f693-44ec-a812-c005065ffc37
33 மாதமான ‘முகி’ என்ற பெண் சிறுத்தை ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. - படம்: ஊடகம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் இந்தியாவில் பிறந்த முதல் சிறுத்தை ஒன்று, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

குனோ தேசியப் பூங்காவில் 33 மாதமான ‘முகி’ என்ற பெண் சிறுத்தை, அண்மையில் ஐந்து குட்டிகளை ஈன்றெடுத்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

அங்கு இந்தியாவில் பிறந்த 33 மாத பெண் முகி குனோ தேசியப் பூங்காவில் ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது, இதன் மூலம் நாட்டில் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

சிறுத்தை மறு அறிமுகம் திட்டத்தால் இது சாத்தியமானதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியின் பேரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் அடைந்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இந்தச் சாதனை பார்க்கப்படுகிறது என்றும் உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பில் மத்தியப் பிரதேச மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், குனோ தேசியப் பூங்காவைச் சேர்ந்த வன ஊழியர்களை வாழ்த்தினார்.

சிறுத்தை மறுமலர்ச்சி திட்டமானது கடந்த 2022, செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது.

அப்போது எட்டு சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து குனோ பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடியால் காட்டுக்குள் விடப்பட்டன.

தொடர்ச்சியான இனப்பெருக்க வெற்றி, அதிகரித்து வரும் சிறுத்தை எண்ணிக்கை, அறிவியல் திட்டமிடல், வலுவான கண்காணிப்பு மூலம், அழிந்துபோன வனவிலங்கு இனங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது உண்மையில் சாத்தியம் என்பதை அண்மைக்கால முயற்சிகள் உணர்த்துவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்