தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று பிள்ளைகள் பெற ஆர்எஸ்எஸ் மக்களுக்கு வேண்டுகோள்

2 mins read
2b6942c3-179d-4116-8b58-5a436043f3de
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற கேள்வி-பதில் அமா்வில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) பேசிய அதன் தலைவர் மோகன் பாகவத். - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் சக்திவாய்ந்த இந்து தேசியவாதக் கட்சியான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், இந்தியத் தம்பதியர் தலா மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதுடன், பிறப்பு விகிதம் குறைந்து வரும் தற்போதைய போக்கின் நீண்டகால அபாயங்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1.46 பில்லியன் மக்களுடன் இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகியுள்ளது. எனினும், பொருளாதார வளர்ச்சியினால் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாகச் சரிந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) மக்கள் தொகை நிதியத்தின் 2025 அறிக்கை கூறுகிறது.

எல்லாத் தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதுடன், அவா்களின் தாய்மொழி, மாநில மொழி, ஒட்டுமொத்த நாட்டுக்கான இணைப்பு மொழி ஆகிய மூன்று மொழிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

இணைப்பு மொழி என்பது வெளிநாட்டு மொழியாக இருக்கக் கூடாது. இணைப்பு மொழியை அனைவரும் சோ்ந்து தோ்வு செய்ய வேண்டும். இந்தியாவில் தோன்றிய அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். அதில் எந்த சச்சரவும் இருக்கக்கூடாது. அதேவேளையில், ஆங்கிலத்தை கற்பதிலும் எந்தத் தவறும் இல்லை. அந்த மொழியால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் அவர்.

புது டெல்லி, விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற கேள்வி-பதில் அமா்வில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) அவர் இக்கருத்துகளைக் கூறினார்.

மத்​திய அரசின் அனைத்து விவ​காரங்​களி​லும் ஆர்​எஸ்​எஸ் அமைப்பே முடிவு எடுக்​கிறது என்​பது மிக​வும் தவறான கருத்து. நாங்​கள் அறி​வுரைகளை மட்​டுமே வழங்​கு​கிறோம். முடிவுகளை பாஜகதான் சுயமாக எடுக்கிறது. அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அந்த வயதில் ஓய்வு பெறுவது கட்டாயமில்லை. 80 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால், நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் என்று அவர்​ பேசி​னார்​.

ஜாதி அமைப்புமுறை முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்