அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்கு இந்தியப் பிரதமர் மோடி பயணம்

2 mins read
37000e3c-a672-4645-bbfa-027a0e69cb78
திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்​தரி கோயி​லின் மேம்பாட்டுப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்​களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று (செப்டம்பர் 22) பயணம் மேற்​கொண்டார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டினார்.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) வெளி​யிட்ட அறிக்​கை​ மூலம் தகவல் தெரி​வித்​துள்​ளது.

பிரதமர் மோடி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்​கேற்று மக்​களிடம் உரை​யாற்றுவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, அருணாச்சலப் பிரதேச பயணத்​தின்​போது, அம்​மாநிலத்​தின் பரந்த நீர்​மின்​சார ஆற்றலைப் பயன்​படுத்​திக்கொள்ள இட்​டாநகரில் ரூ. 3,700 கோடி மதிப்​புள்ள இரண்டு பெரிய நீர்​மின் திட்​டங்​களுக்குப் பிரதமர் மோடி அடிக்​கல் நாட்டினார்.

அதன்​படி, 240 மெகா​வாட் ஆற்றலில் ஹியோ நீர்​மின் திட்​டம் மற்​றும் 186 மெகா​வாட் ஆற்றலில் டாட்​டோ-I நீர்​மின் திட்​டம் ஆகியவை செயல்​படுத்​தப்பட உள்​ளன. இந்த இரண்டு திட்​டங்​களும் அருணாச்சலப் பிரதேசத்​தின் சியோம் ஆற்றில் துணைப் படு​கை​யில் உரு​வாக்​கப்​படும்.

9,820 அடி உயரத்​தில் தவாங்​கில் ஓர் அதிநவீன மாநாட்டு மையத்​துக்​கும் பிரதமர் மோடி அடிக்​கல் நாட்​டு​கிறார். தவாங்​கின் எல்லை மாவட்​டத்​தில் 9,820 அடி உயரத்​தில் அமை​யும் இந்த மையம் தேசிய மற்​றும் அனைத்துலக மாநாடு​கள், கலாசார விழாக்​கள் மற்​றும் கண்​காட்​சிகளை நடத்​துவதற்​கான அனைத்து வசதி​களை​யும் கொண்​ட​தாக இருக்​கும். இது, அப்பகுதியின் சுற்​றுலாத்துறையை மேம்படுத்துவதுடன் அங்குள்ள மக்களின் கலா​சா​ரம் பற்றியும் மற்றவர்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கும்.

சுகா​தா​ரம், தீயணைப்புப் பாது​காப்​பு, பணிபுரி​யும் பெண்​களுக்​கான விடு​தி​கள், இணைப்​பு​களை மேம்படுத்துதல் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களுக்கு உதவும் வகை​யில் ரூ.1,290 கோடி மதிப்புள்ள பல முக்​கிய உள்​கட்​டமைப்புத் திட்​டங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

திரிபு​ரா​வுக்​கு புறப்​பட்டுச் செல்​லும் பிரதமர் மோடி, மாதா திரிபுர சுந்​தரி கோயி​லில் சாமி தரிசனம் செய்​ய இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அக்​கோயி​லின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதுப்பொலிவுடன் காணப்படும் திருத்தலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பழமையான அக்கோயில் 51 சக்திப் பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்