இந்தியா-இலங்கை எல்லையில் கடலோரக் காவல் படையின் சுதந்திர தினக் கொண்டாட்டம்

2 mins read
d1ea8d6b-f737-4a72-92fa-b4a512a27a16
 அரிச்சல்முனையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் - படம்: ஊடகம்

ராமேசுவரம் / முதுமலை: இந்திய-இலங்கை எல்லைப்பகுதியின் அரு​கே​ அரிச்​சல்​முனை​யில் வெள்ளிக்கிழமை அன்று இந்திய கடலோரக் காவல் படை சுதந்​திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு அணிவகுப்பை நடத்தியிருக்கிறது.

ஃஹோவர் கிராப்ட் சுற்றுக் காவல் படகில், தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்​கள் சுற்றி வந்​தனர். இதையடுத்து அரிச்​சல்​முனை கடற்​கரை​யில் கொடியேற்று விழா நடை​பெற்​றது.

கடலோரக் காவல் படையினர், தனுஷ்கோடி கடற்​பகு​தி​யில் மூவண்ணக் கொடியைப் பிடித்​துக் கொண்டு நீச்​சல் அடித்தனர்.

அதே​போல, பாம்​பன் பாலத்​தில் தேசி​யக் கொடி​யுடன் இந்​திய கடலோரக் காவல் படை​யினர் அணிவகுத்து சென்றனர்.

அதே சமயத்தில் நீல​கிரி மாவட்​டம் முது​மலை புலிகள் காப்​பகத்​தில் உள்ள தெப்​பக்​காடு யானை​கள் முகாமில் சுதந்​திர தினத்​தையொட்டி யானை​கள் தேசி​யக் கொடிக்கு மரி​யாதை செலுத்​தின. தெப்​பக்​காடு யானை​கள் முகாமில் 20க்​கும் மேற்​பட்ட வளர்ப்பு யானை​கள் உள்​ளன.

இங்கு வெள்ளிக்கிழமை சுதந்​திர தின விழா விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. யானை​கள் அணிவகுத்து நிற்க, அவற்​றின் மீது தேசி​யக் கொடியை ஏந்​திய​வாறு பாகன்​கள் அமர்ந்​திருந்​தனர். புலிகள் காப்பக இணை இயக்​குநர் வித்யா தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​தார்.

அந்த சமயம், வளர்ப்பு யானை​கள் தும்​பிக்​கையை உயர்த்தி பிளிறியபடி தேசி​யக் கொடிக்கு மரி​யாதை செலுத்​தின. யானை​களின் பிளிறல் அங்கு கூடி​யிருந்த சுற்​றுலாப் பயணி​களை ஆச்சரியப்பட வைத்தது. அனைத்து யானை​களுக்​கும், கரும்​பு, வெல்​லம் உள்​ளிட்ட உணவு​கள் வழங்​கப்​பட்​டன.

குன்​னூரில் 79வது சுதந்​திர தின விழாவையொட்டி, உயிர்​நீத்த ராணுவ வீரர்​களின் போர் நினைவுச் சதுக்​கத்​தில் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. இதில் ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் மற்​றும் முன்​னாள் ராணுவத்​தினர் உட்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

குறிப்புச் சொற்கள்