பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: விமானங்களை இயக்கும் விதிகளில் திருத்தம்

1 mins read
2f73a3e5-0d07-4e4c-b73e-98846372af07
விமானத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கே விமான குழுவினா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என டிஜிசிஏ கூறியது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: விமானங்களை இயக்கும் விதிகளில் மத்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மேற்கொண்டது.

இதுதொடா்பாக இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், “பருவநிலை மாற்றத்தால் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. விமானத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதைவிட பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கே விமானக் குழுவினா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” எனக் கூறியது.

மேலும், மோசமான வானிலையின்போது உரிய விதிகளைப் பின்பற்றி மாற்றுப்பாதையில் விமானிகள் விமானத்தை இயக்கலாம் அல்லது புறப்பட்ட விமான நிலையத்திற்கே உடனடியாக விமானத்தைக் கொண்டுசெல்லலாம் என்றும் அதில் அது குறிப்பிட்டது.

எனினும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அசாதாரண சூழல் குறித்து பயணிகள், விமானக் குழு, விமானப் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கும் அமைப்பு ஆகியவற்றிற்கு விமான நிறுவனங்கள் முறையாகத் தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும், இந்த விதிகள் பருவமழைக்கு முந்தைய காலகட்டம், பருவமழை, மோசமான வானிலையின்போது தொடா்ச்சியாக விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள், தேவைக்கேற்ப விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள், விமானக் குழு என அனைத்துக்கும் பொருந்தும் எனவும் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்