எனக்கு 79 உனக்கு 75; காதல் திருமணம் செய்த மூத்தோர்

1 mins read
acf7ab14-f351-4040-859a-4268ac413da4
முதியோர் நலக் காப்பகத்தில் வசித்து வரும் விஜயராகவன் (79), சுலோச்சனா (75) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். - படம்: இந்திய ஊடகம்

கொச்சி: கேரள மாநிலத்தில் அரசாங்கம் நடத்தும் முதியோர் நலக் காப்பகத்தில் வசித்து வரும் விஜயராகவன் (79), சுலோச்சனா (75) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணம் செய்துகொண்டனர்.

கேரளாவின் உயர்கல்வி அமைச்சர் பிந்து, நகர மேயர் எம்.கே. வர்கீஸ் முன்னிலையில் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த அழகான தருணத்திற்குச் சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்