தகிக்கும் வெயில்: இந்தியாவில் பெண் ஊழியர்களைக் கவனித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்

1 mins read
520b0775-2c89-4c16-b66a-cae480e8329c
அனல் காற்றால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான புதுடெல்லி. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவில் வெயில் அதிகமாக இருப்பதால் முறைசாரா ஊழியர்களைக் (informal workers) கவனித்துக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு ஆலோசனை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

இந்திய தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையம் (என்டிஎம்ஏ) முதன்முறையாக தேசிய தொழில் சட்டங்களுக்கு உட்படுத்தப்படாத ஊழியர்களுக்கென இத்தகைய அறிவுரையை வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கம், முதன்முறையாக அதிகபட்ச வெப்பநிலையைக் குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்சினையாக வகைப்படுத்தியுள்ளது. அப்பிரச்சினைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை அரசாங்கம் கருத்தில்கொண்டு செயல்படுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அனல் காற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில அரசாங்கங்கள் இதுபோன்ற ஆலோசனை அறிக்கைகளை விடுத்திருந்தன.

கடந்த இரு வாரங்களாக இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மோசமான அனல் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் உள்ள பல நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியசாகப் பதிவாகிவந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் புழுக்கமாக இருந்துவருகிறது.

கிழக்கு இந்திய நகரங்களிலும் நிலைமை அதேபோல்தான் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்