பாட்னா: பீகாரில் ரயில் தண்டவாளத்தில் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஐவர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பதின்மவயது மாணவர்கள்.
அப்போது அவ்வழியாகச் சென்ற ரயில் அவர்கள் மீது மோதியது.
இதன் காரணமாக அந்த ஐவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ரயில் பிரிவு காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வழியிலேயே மூவரின் உயிர் பிரிந்தது. ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
ஐந்தாவது இளையரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

