குற்றச்செயல்களில் தண்டனை பெற்ற வெளிநாட்டவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை

1 mins read
722383be-4acb-4c9b-8103-2d29574ec98b
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, இரு நாள்களுக்கு முன்பு அமலுக்கு வந்துள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் குடியேற்ற, வெளிநாட்டினர் சட்டம் 2025 தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இப்புதிய சட்டத்தின்படி, கடும் குற்றச்செயல்களில் தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசவிரோதச் செயல்கள், உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவை கடுங் குற்றங்களாகக் கருதப்படும். இந்தக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் இந்தியாவுக்குள் இனி நுழையவும் தங்கி இருக்கவும் அனுமதி இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, இரு நாள்களுக்கு முன்பு அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் குடியேற்றம் தொடர்பாக முன்பு அமலில் இருந்த நான்கு பழைய சட்டங்கள் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திரைப்படம், ஆவணப்படம், இணையத் தொடர்கள் அல்லது வணிகத் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்க வரும் வெளிநாட்டினர், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும், நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்று, எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டால், அவர்களின் ‘பயோமெட்ரிக்’ தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மத்திய அரசின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என இந்திய உள்துறை அமைச்சு மேலும் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்