தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியக் கடற்படை போர் விமானங்களை இயக்கப்போகும் முதல் பெண் அதிகாரி

1 mins read
2274156a-e66a-4a99-a848-5a896b00f2af
அஸ்தா பூனியா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய கடற்படை பெண் அதிகாரியான அஸ்தா பூனியா, கடற்படையின் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்தச் சாதனையைப் புரியும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்திய ராணுவப் படையில் ‘துணை லெஃப்டினென்ட்’ஆகப் பணியாற்றுகிறார் அஸ்தா பூனியா.

போர் விமானிக்கான பயிற்சி வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, எதிர்காலத்தில் அவரால், இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்டுள்ள ‘மிக்-29 கே’, ‘ரஃபேல்’ ஆகிய போர் விமானங்களை இயக்க முடியும்.

இந்திய ராணுவ விமானிகளுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அதிநவீன ‘ஜெட்’ போர் பயிற்சி விமானமான ‘ஹாக் 132’ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது பயிற்சியை முடித்துள்ள அஸ்தா பூனியாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இவரது சாதனையை அடுத்து, இந்தியக் கடற்படையில் பெண் போர் விமானிகளுக்கான தடை நீங்குவதுடன் புதிய சகாப்தம் துவக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

விருதுடன் பயிற்சியை முடித்துள்ள அஸ்தா பூனியாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்