டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேகப் பேர்வழியின் புகைப்படம் வெளியீடு

1 mins read
41c94782-d3e6-4a97-b33f-f9018f9c6d13
டெல்லி கார் குண்டு வெடிப்பில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மருத்துவர் உமர் முகமது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் பயங்கரவாத நடவடிக்கையின் கீழ் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு மருத்துவர்களான அதீல் அகமது ராதர் மற்றும் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாக உமர் இருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை செயலர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்